சூயஸ் கால்வாயில் ஒரு வாரத்திற்கு பின்னர் பயணத்தை தொடங்கிய எவர் கிவன்!

சூயஸ் கால்வாயில் கடந்த ஒருவார காலமாக சிக்கி தவித்த எவர் கிவன் சரக்கு கப்பன் மீட்கப்பட்டதை தொடர்ந்து பயணத்தை தொடங்கியுள்ளது. 

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் உலகின் முக்கியமான நீர் வழித்தடங்களுள் ஒன்று. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3000 கோடி வர்த்தகம் நடைபெறும் இந்த கால்வாயானது ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைக்கிறது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி அன்று தைவானைச் சேர்ந்த உலகின் பிரமாண்ட சரக்கு கப்பலான எவர் கிவன் சூயஸ் கால்வாயை கடக்கும்போது அடித்த பலமான காற்றில் கட்டுபாட்டை இழந்து குறுக்காக தரை தட்டி நின்றது.

கடந்த ஒரு வார காலமாக கப்பலை மீட்பதில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில் ஞாயிறன்று நெதர்லாந்தில் இருந்து வந்த ஸ்மித் இன்டர்நேஷ்னல் என்ற கப்பல் மீட்பு குழுவின் முயற்சியால் நேற்று எவர் கிவன் மிதக்கும் நிலைக்கு மீட்கப்பட்டது. தொடர்ந்து முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் சிக்கிய பிரமாண்ட சரக்கு கப்பல் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *