சுயேட்சையாக போட்டியிடும் அதிமுகவினர்… அதிரடியாக நீக்கிய கட்சி தலைமை!
தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களம் கண்ட அதிமுக கட்சியை சேர்ந்த இருவரை அக்கட்சி தலைமை அதிரடியாக நீக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது. முந்தைய தேர்தல்களில் அதிமுக கோட்டையாக கருதப்பட்ட பல இடங்களும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக அதிமுக கட்சியின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போராட்டத்தில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு வந்தனர்.
இந்த நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஒன்றிய அதிமுக மகளிர் அணி செயலாளர் லட்சுமி, நெல்லையை சேர்ந்த அதிமுக பேச்சாளர் முனைவர் சடகோபன் மற்றும் மேலும் 6 பேரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.