ஒரே மேடையில் மோடி, ஈபிஎஸ், ஓபிஎஸ்
ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, தாராபுரத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக, ஈபிஎஸ், ஓபிஎஸ், மோடி அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.
அந்தக் கூட்டத்தில் பேசி வரும் ஈபிஎஸ், “காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மருத்துவகல்லூரியைப் பெறுவதே போராட்டமாக உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியது பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான்.
அதிமுக – பாஜக இடையே இணக்கமான உறவு உள்ளதால் தமிழகத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இந்தியா பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது.” என்று தெரிவித்துள்ளார்.