எஸ்.வி. சேகர் என்ன எழுதப் படிக்கத் தெரியாதவரா? உயர்நீதிமன்றம் கேள்வி

2018 ஆம் ஆண்டு பெண் நிருபர் குறித்து தவறான கருத்தை பகிர்ந்ததாக நடிகர் எஸ். வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இது குறித்து எஸ்.வி. சேகர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி சடகோபன் என்பவர் எழுதிய பதிவை படிக்காமல் பார்வேர்ட் செய்து விட்டேன். பின்னர், பெண் பத்திரிக்கையாளர் குறித்த அவதூறு என தெரிய வந்ததால் ஏப்ரல் 20 ஆம் தேதி அந்த பதிவை நீக்கி மன்னிப்பும் கோரியிருந்தேன் என தெரிவித்திருந்தார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பேஸ்புக்கில் வந்ததை படிக்காமல் பார்வேர்ட் செய்வதற்கு அவர் என்ன படிக்காதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என தெரியாத இவர்கள் முக்கிய பிரமுகர்கள் என எப்படி சொல்லிக் கொள்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு விதிக்க தடை விதித்தும், வழக்கிற்காக ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிற்கு காவல் துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *