இந்தியாவில் ஒரே நாளில் 56,000 க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு!

இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் 56, 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் 56,119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனாவால் மொத்தம் 1,20,95,329 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேலும் நேற்று பலியானோர் எண்ணிக்கை 266 அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,62,147 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 36,983 பேர் குணமாகி இதுவரை 1,13,90,829 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 5,37,511 பேர் சிகிச்சையில் உள்ளனர்.