முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 4 ஆண்டு சிறை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சின்ன சேலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1991ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின்போது சின்ன சேலம் எம்.எல்.ஏ.வாக பரமசிவம் இருந்தார். இதற்கிடையே, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.