பாஜக என்ன செய்தாலும் தமிழகத்தில் எடுபடாது – மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.அப்போது பேசிய அவர்,பாஜக என்ன செய்தாலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது என தெரிவித்தார்.

திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும்,அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவும் எனவும்,ஒரு தொகுதியில் கூட இந்த கூட்டணியால் வெற்றி பெற முடியாது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களை முகக் கவசம் அணியுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *