திருச்சுழி தொகுதி தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்
திருச்சுழி தொகுதியின் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற சுயேட்ச்சை வேட்பாளரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் வழங்கப்படுவதாக சுயேட்சை வேட்பாளர் திருப்பதி புகார் தெரிவித்தார். மேலும் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிம்னறத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய முடியாதென்றும், தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், வேண்டுமானால் மனுதாரார் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி நிவாரணம் பெறலாம் என்றும் கூறியுள்ளது
மேலும் பரிசுப்பொருள் வழங்கிய தங்கம் தென்னரசுவை தகுதி நீக்கம் செய்ய முடியாதென்றும் தெரிவித்து வழக்கினை முடித்து வைத்துள்ளது.