தமிழகத்தில் 2200-ஐ கடந்த கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,கடந்த இரண்டு நாட்களாக நாளொன்றுக்கு 2000 பேருக்கு மேல் கொரோனா தொற்று தமிழகத்தில் பதிவாகி வருகிறது.இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 2279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,000-த்தை கடந்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 815 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,தஞ்சாவூர்,நாகை மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் இந்த சூழலில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு வேகப்படுத்தியுள்ளது.
மேலும்,வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.