சூயஸ் கால்வாயிலிருந்து மீளூமா எவர் கிவ்வன்?? போராடும் மீட்புக்குழு!

சூயஸ் கால்வாயில் குறுக்காக தரைத்தட்டி நிற்கும் உலகின் பிரமாண்ட சரக்கு கப்பலால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உலகின் முக்கியமான வணிக நீர்த்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். கடந்த 23ம் தேதி தைவான் நாட்டைச் சேர்ந்த எவர்கிவ்வன் சரக்கு கப்பல் சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்து நாட்டிற்கு புறப்பட்ட இந்த சரக்குக்கப்பல் சூயஸ் கால்வாயில் பயணிக்கும்போது அடித்த பலமான காற்றில் கட்டுபாட்டை இழந்து கால்வாயின் குறுக்காக தரை தட்டி நிற்கிறது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இப்பாதை தற்போது அடைபட்டிருப்பதால் கப்பல் வாயிலான சர்வதேச சரக்கு போக்குவரத்து பெரிதும் ஸ்தம்பித்துள்ளது. கடந்த 6 ஆறு நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் இந்த பிரமாண்ட கப்பலால் ஒரு மணி நேரத்துக்கு ரூ 3000 கோடி இழப்பீடு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது 2 லட்சம் எடையுள்ள சரக்கு பெட்டகங்களை  கொண்ட கப்பலை மீட்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கப்பலை மீட்பதற்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு மீட்பு குழு வந்துள்ளது. கப்பலின் அடிப்பகுதியில் உள்ள மணல் பகுதியைத் தோண்டி அதனை வெளியே இழுப்பதற்காக 14 இழுவைப் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இது வரை 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ள நிலையில் இம்முயற்சி வெற்றிபெறாவிட்டால் கப்பலுக்கு உள்ளே உள்ள சரக்குகளை வெளியில் எடுத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மிதக்கும் நிலைக்கும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தவறு மனிதர்கள் அல்லது தொழில்நுட்ப கோளாறால் தான் நேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு போக்குவரத்தின் முக்கிய நீர்வழித்தடமாக இருக்கும் இந்த சூயஸ் கால்வாய் அடைப்பட்டுள்ளது உலகின் மற்ற வணிகத்திலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *