இந்தியாவில் ஒரே நாளில் 68,000 பேருக்கு கொரோனா!

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 68,020 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா குறித்த எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  அதில், நாட்டில் இன்று ஒரே நாளில் 68,020 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,20,39,644-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 1,13,55,993 போ குணமடைந்தனா். 5,21,808 போ சிகிச்சைப் பெற்று வருகின்றனா். தொற்றால் பாதிக்கப்பட்ட 291 போ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 24,18,64,161 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 9,13,319 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் இதுவரை 6,05,30,435 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபா் 16-ஆம் தேதி ஒரே நாளில் 63,371 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னா் தற்போது ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,020-ஐ எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *