ஆ.ராசாவின் சர்சை பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை – சத்ய பிரதா சாகு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொள்வதும் தேர்தல் பரப்புரையில் சகஜம் தான். திமுகவின் ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பேசியிருந்தார். முதல்வரின் தாயார் குறித்து பேசியாதால் அது சர்ச்சையானது.
தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆ. இராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று, ஆ.ராசா தனது பேச்சுக்கு முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.