பறக்கும் படை சோதனையில் அதிமுக கரை வேட்டிகள் பறிமுதல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். விராலிமலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அதிமுக கரை போட்டி வேட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் கொண்டு வரப்பட்ட 60 அதிமுக கரை போட்ட வேட்டிகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.