கூட்டணி கட்சி வேட்பாளருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் பாமக!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் உள்ளது.
கூட்டணியில் திருக்கோவிலூர் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரைக் கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், கூட்டணி கட்சிகளுக்கு உள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் கலிவரதன், பாமக நிறுவனர் ராமதாஸை ஒருமையில் பேசியதைக் கண்டித்து பாமகவினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.