ஒரே நாளில் 60 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் சில மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62, 58 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. 30,386 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 291 பேர் உயிரிழந்தனர்.
இதனால், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,08,910 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆகவும் உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1,61,240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,52,647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போது, வரை 5,81,09,773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.