விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்… பெருகும் ஆதரவு!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசு 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் நாட்டின் தலைநகர் டெல்லியில் கடந்த நான்கு மாதங்களுக்கும் தொடர்ந்து 121-வது நாளாக பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத விவசாயிகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று காலை தொடங்கிய முழு அடைப்பு போராட்டத்தால், அனைத்து சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.