பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் தள்ளிவைப்பு!
சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி நாளை தமிழகம் வர இருந்த நிலையில் ஏப்ரல் 3ம் தேதிக்கு அவரது வருகை மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக வேட்பாளர்களை ஆதரித்து தேசிய கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதன்படி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை தமிழகம் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரியங்கா காந்தியின் வருகை அடுத்த மாதம் 3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதே வேளையில் கன்னியாகுமரியில், பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.