நம் வேட்பாளர்களை அறிவோம் ; அறப்போர் செயலி வெளியீடு
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, மக்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிந்து ஓட்டு போட வேண்டும் என, ’அறப்போர் இயக்கம்’ செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த செயலி, வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவில் தெரிவித்துள்ள தகவல்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களைப் பற்றி முழு விவரங்களை அறிய விரும்புபவர்கள் ‘Arappor Iyakkam – Empowering Citizens’ என்ற செயலியை ப்ளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பின், சுயேட்சை வேட்பாளர்கள் முதல் அனைத்து கட்சி வேட்பாளர்களின் வயது, தொழில், கல்வி, வருமானம், சொத்து விவரம், கடன் விவரம் மற்றும் குற்ற வழக்குகள் என அனைத்து தகவல்களும் கிடைக்கும். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயன்படுத்தும் வசதி உள்ளது.