தமிழகத்தில் 2 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கோவை,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தினசரி 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது அது நாளொன்றுக்கு 2000 பேரை நெருங்கி வருகிறது.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.