சென்னை பயிற்சி மையத்தை சேர்ந்த 18 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில், அண்மையில் குறைந்திருந்த கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சென்னையிலும் தொற்று பாதிப்பின் வீதம் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா இரண்டாவது அலை பரவுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

இந்நிலையில்,  சென்னை கிண்டியிலுள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தை சேர்ந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 150 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் தான் 18 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அந்த மையத்தைச் சேர்ந்த மேலும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *