சென்னையில் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியுள்ளது!
சட்டமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் தபால் வாக்குகள் பெறும் பணி தொடங்கியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று முதல் சென்னையில் தபால் வாக்கு பெறும் பணி தொடங்கியுள்ளது.
80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தபால் வாக்குகள் செலுத்துவோரின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு பெறப்படுகிறது.
மேலும், சென்னையில், 16 தொகுதிகளில் இந்த தபால் வாக்கு பதிவு பெற உள்ள நிலையில், 15 தபால் ஓட்டுக்களுக்கு ஒரு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்கு, மார்ச்-31ம் தேதி வரை பதிவு செய்யப்படுகிறது. தபால் வாக்குகள் பதிவு வீடியோ எடுக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்த தபால் வாக்கு பதிவு செய்ய 7,300 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.