கடந்த 24 மணி நேரத்தில் 60,000ஐ நெருங்கிய கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கியுள்ளது.

கொரோனா குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,652ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,60,949 ஆக அதிகரிதுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *