என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர்-ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதனையடுத்து அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
புதுச்சேரியில் வாக்கு சேகரிப்பதைக் காட்டிலும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் யார் முதல்வராக பொறுப்பேற்பார் என்பதே மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நான்தான் முதல்வர் என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். . முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் தேவையில்லை என ரங்கசாமி கூறியுள்ளார். கூட்டணி வெற்றி பெற்றால் நான் முதல்வராவேன் என்று நமசிவாயம் பேசி வருவதற்கு மாறாக ரங்கசாமி இவ்வாறு பேசியுள்ளார்.