விசிக-வின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விழுப்புறத்தில் வெளியிட்டுள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சனாதானத்தை விரட்டியடிப்பதே இந்தத் தேர்தலின் முக்கிய நோக்கம். தேசிய கல்விக்கொள்கையை புறக்கணிப்போம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.