வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடக்கிறது – சி.டி.ரவி

தமிழகத்தில் வருமானத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடக்கிறது என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தான் வருமானவரி சோதனை பற்றி கவலைப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.