மருத்துவ படிப்பு உள் இடஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசின் முடிவு நிராகரிப்பு!
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இதனால், 10% இடஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் புதுச்சேரி அமைச்சரவையில் இயற்றப்பட்டது.
இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்காமல் இருந்த நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி என்ற மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் புதுவை அரசின் முடிவு சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளது.
மேலும், புதுவை அரசு கொண்டு வந்துள்ள இந்த உள் இட ஒதுக்கீடு நீட் தேர்வை நீர்த்து போகச் செய்யும் என மத்திய அரசு நிராகரித்துள்ளது.