தொடர்ந்து 2வது நாளாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை அவ்வபோது மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி மாநிலங்களில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்தவகையில், கடந்த மாதம் படிப்படியாக உயர்ந்து வந்த பெட்ரோல் விலை, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் பிறகு தமிழகத்தில் மாற்றமில்லாமல் இருந்து வருகிறது.
இதனிடையே நேற்று பெட்ரோல் விலை சற்று குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது.
நேற்றைய நிலையில் இருந்து பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.92.77 காசுகளுக்கும், டீசல் விலை 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.86.10 காசுகளுக்கும் இன்று விற்பனையாகிறது.