திருவாரூரில் கோலாகலமாக தொடங்கிய ஆழித்தேரோட்டம்!

உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜரின் ஆழித்தேரோட்டம் இன்று காலையில் விமரிசையாக  தொடங்கியுள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய தேராக திருவாரூர் ஆழித்தேர் கருதப்படுகிறது.  உலக புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக தொடங்கியது.

96 அடி உயரமும் 400 டன் எடையும் கொண்ட ஆழித் தேரை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வடம்பிடித்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்களும் வடம்பிடித்து இழுத்தனர்.  கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆழித்தேரோட்டம் தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில்  சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், திருவிழாவில் மக்கள் அதிகமாக கூடுவர் என்பதால் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *