தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

தேர்தல் நடைபெறும் நாளில் நேரில் வந்து வாக்களிக்க முடியாதவர்களுக்காக தபால் வாக்கு முறை அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலில் தபால் வாக்குக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அவ்வாறு, விண்ணப்பித்தவர்களுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏழு நாட்களுக்கு இந்த வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் கொரோனா பாதித்தவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை பெற உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 70 பேர் கொண்ட குழு 7,300 தபால் ஓட்டுகளை வீடுகளுக்கே சென்று பெற உள்ளனர். ஒருவர் ஒரு நாளைக்கு 15 நபர்களிடன் தபால் ஓட்டுகளை பெற உள்ளதாகவும், ரகசியம் காக்கப்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *