சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஆண் வேட்பாளர்கள் 3,585 பேர், பெண் வேட்பாளர்கள் 411, மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் சட்டபேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர். மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் 4,442 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *