ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா!நான் சொல்லல புள்ளிவிவரம் சொல்லுது….

தமிழகத்தில் மேலும் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,73,219 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1027 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,50,091 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,641 ஆக உயர்ந்துள்ளது.
அரசு மருத்துவமனையில் 05; தனியார் மருத்துவமனையில் 05 பேர்; இதர வகையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,43,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,90,92,221 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 81,103 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 10,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,27,343 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,044 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,45,841 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 735 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 190.

வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம்-5.
அசாம்-1.
குஜராத்-1.
கேரளா-1.

வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசம்-1. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *