தமிழர்கள் நலனுக்கு துரோகம் செய்துள்ள அதிமுக – பாஜக கூட்டணி – ப.சிதம்பரம் கண்டனம்

தமிழர்கள் நலனுக்கு துரோகம் செய்துள்ள அதிமுக – பாஜக கூட்டணிகளை மக்கள் தண்டிக்க வேண்டும், தமிழர்களின் உணர்வுகளை மதித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.