கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் மாற்றம்-தேர்தல் ஆணையம் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோர் அப்பதவியில் இருந்து மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,கோவை ஆட்சியராக நாகராஜனும் மற்றும் மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *