கொரோனாவை கட்டுபடுத்த மாநில அரசுகளே கட்டுப்பாடுகளை விதிக்கலாம் – மத்திய அரசு

உலகைத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால், மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் அந்தந்த மாநில அரசுகளே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.