அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்குத் தர தடையில்லை – உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு எதிரானது என சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான சின்னங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த முறை அங்கீகரிக்கப்பட்ட சின்னத்தை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கக் கூடாது என கூற முடியாது” என தெரிவித்துள்ளனர்.
மேலும், தேர்தல் முடிந்த பிறகு மனுதாரரின் கோரிக்கை குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்த தேர்தலில் இந்த விதிமுறைகளை அமல்படுத்துவது சாத்தியமா? என்பதை தேர்தல் ஆணையம் விரிவாக விளக்க எனவும் உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்து உச்ச நீதி மன்றம்.