கூகுள் நிறுவனத்தின் முக்கிய பதவியை ராஜினாமா செய்த சென்குப்தா!

கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவா் கெய்சா் சென்குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் செய்துள்ளது.

கடந்த 15 வருடங்களாக கூகுள் நிறுவனத்தின் முக்கிய செயலிகளான கூகுள் பே, நெக்ஸ்ட் பில்லியன் யூஸா்ஸ் ஆகியவற்றின் உதவித் தலைவராகவும், பொது மேலாளராகவும் பணியாற்றி வந்தவா் கெய்சா் சென்குப்தா.

தனது ராஜினாமா குறித்து சென்குப்தா கூறுகையில், ”எனது முடிவு உங்களில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதை நான் அறிவேன். இதனால் ஏற்படக்கூடிய எந்தவொரு வலி அல்லது ஏமாற்றத்திற்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். புதிய உலகத்தை காண ஆர்வமுடன் இருக்கிறேன். என் இதயம் நன்றியாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்துள்ளது. கூகிளில் தலைமையேற்று பணி செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி தந்த கூகிள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கும் சென்குப்தா நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூகுள் நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய சென்குப்தா, குரோம், நெக்ஸ்ட் பில்லியன் யூஸா்ஸ், கூகுள் பே போன்றவற்றை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவா். கூகுள் நிறுவனத்தைவிட்டு விலகுவதாக அவா் தனிப்பட்ட முடிவை எடுத்துள்ளாா். அவா் அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதை அறிய ஆவலுடன் உள்ளோம். அவரது புதிய பயணத்துக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *