ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ஓரளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு தற்போது தான் திரும்பி வருகின்றனர்.

ஆனால், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க டெல்லியில் பிரதமர்
நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

.ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 45 வயதான இணை நோய் உடையோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில்,தற்போது ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பதாக அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *