அமைச்சர் விஜயபாஸ்கரின் டைரி சிக்கியது!

அமைச்சர் விஜயபாஸ்கர்  போட்டியிடும் விராலிமலை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அமைச்சரின் பெயர் எழுதப்பட்ட டைரி சிக்கியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அதிமுகவினரிடம் இருந்து கரைச்சேலைகள் மற்றும் மளிகை பொருட்களை கொண்டு சென்ற காரை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரமேஷ் என்பவரின் அந்த காரில் அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி சிக்கியுள்ளது.

கைப்பற்றப்பட்ட அந்த டைரியில் பணம், சேலைகள், மளிகை பொருட்கள் விநியோகம் தொடர்பான தகவல்கள் டைரியில் எழுதப்பட்டிருந்தது. மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் பட்டியலும், விராலிமலை தொகுதியில் உள்ள பகுதிகளின் பெயகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி முழுவதும் பணம் மற்றும் பொருட்கள் வழங்க விஜயபாஸ்கர் திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து, காரை ஒட்டி வந்த ரமேஷ் என்பவரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *