லாக்டவுனிற்கு முதல் பிறந்தநாள்,கதிகலங்கும் ட்விட்டர்

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வேகமாக பரவிய சமயத்தில் இன்றைய தினம்(மார்ச் 22) முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைப்பற்றி பலரும் நினைவுக்கூர்ந்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா நோய் பரவ தொடங்கியது. இந்தியாவில் இதன் தாக்கம் 2020ல் மெல்ல ஆரம்பித்தது. நோய் பரவுவதை தடுக்க கடந்தாண்டு மார்ச்-ல் தேசிய அளவிலான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முதல் ஊரடங்கு கடந்த மார்ச் 22-ஆம் தேதியான இன்று தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அன்றைய தினம் கொரோனாவை எதிர்த்து போராடும் முன்கள பணியாளர்களை ஊக்குவிக்க கைதட்டி ஊக்கப்படுத்தும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்தியா முழுக்க மக்கள் அதை செய்தனர். தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் மெல்ல உயர்ந்து சில மாதங்கள் நாடு முழுக்க ஊரடங்கு பிறபிக்கப்பட்டது, பின் படிப்படியாக அவை தளர்த்தப்பட்டது அனைவரும் அறிந்ததே.


தற்போது மீண்டும் ஓராண்டுக்கு பின் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகிறது. கடந்தாண்டு இதேநாளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட தினத்தை ட்விட்டரில் பலரும் நினைவுக்கூர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *