பாஜக தேர்தல் அறிக்கை ”தொலைநோக்கு பத்திரம்”என்ற பெயரில் வெளியீடு

தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் பாஜக-வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இதனை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனை வெளியிட்டார்.
இந்து கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்,தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும், மாணவர்களுக்கு இலவச டேப்லட்,ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்,தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் போன்ற பல வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளது.
மீண்டும் சட்டமேலவை கொண்டுவரப்படும்,புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்படும்,சென்னை மாநகராட்சி மூன்றாக பிரிக்கப்படும்,மீனவர்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை போன்ற அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.