தேர்தல் பிரச்சாரத்துக்கு தடைவிதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் பிரச்சாரங்களில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றபடாத காரணத்தால் பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கொரோனா தொற்று காரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க முடியாது எனவும், தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால், அதில் தலையிட முடியாது என்றும், பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்து வழக்கினை முடித்து வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *