தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியீடு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் வேட்மனு தாக்கல் கடந்த 19ம் தேதி முடிந்தது. தேர்தலில் போட்டியிட 6,183 ஆண்கள், 1,069 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மூன்று பேர் என, மொத்தம், 7,255 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. அதில், 2,700க்கும் மேற்பட்ட மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், 22 ஆண்கள், ஒரு பெண் என, மொத்தம், 23 பேர் மனு தாக்கல் செய்த நிலையில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் வேட்பு மனுவை தாக்கல் செய்தோர் திரும்ப பெற இன்றே கடைசி தேதி எனவும் இன்று மாலையில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு, சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *