தேசிய விருதை தட்டிச்சென்ற தமிழ் பிரபலங்கள்
2019 ஆம் ஆண்டுக்கான, 67 ஆவது சர்வதேச திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் இந்த ஆண்டு தமிழ் படங்கள் அதிகளவில் தேசிய விருதுகளை வென்றுள்ளது.
விஸ்வாசம் படத்துக்காக இசையமைப்பாளர் டி.இமான், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.
நடிகர் பார்த்தீபன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒத்த செருப்பு’ படத்துக்காக சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
’அசுரன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷ்க்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதேபடத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
’ஒத்த செருப்பு’ படத்தின் சிறந்த ஒளிக்கலவைக்காக ரசூல் பூங்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.