சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு… 4 காவலர்களுக்கு ஜாமீன் மறுப்பு!
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சார்பு ஆய்வாளர் உட்பட 3 காவலர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவலர்கள் அங்கு சித்ரவதை செய்து அடித்து கொன்றனர்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தந்தை மகன் இருவரும் போலீசாரால் கொல்லப்பட்டதையடுத்து இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் காவலர் பால்துரை சிறையில் பலியாக, மீதி ஒன்பது பேர் சிறையில் இருந்தனர்.
சிபிஐ விசாரித்து வரும் இந்த கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சார்பு ஆய்வாளர் ராகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜா, தாமஸ் ஃபிரான்சிஸ் ஆகியோரின் ஜாமீன் மனு சமர்ப்பித்திருந்தனர். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 4 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. 4 பெரும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.