குணச்சத்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

தமிழ் சினிமாவின் குணச்சத்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் மதுரை மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ரேணிகுண்டா, பில்லா2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, கண்ணே கலைமானே போன்ற படங்களில் குணச்சத்திர நடிகராக நடித்தவர்  தீப்பெட்டி கணேசன். 

சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பால் வாங்குவதற்கு கூட காசில்லாமல் சிரமப்பட்ட நிலையில், அந்த வேதனையை வீடியோ வாயிலாக தெரிவித்தார். இதனைக் கண்ட பாடலாசிரியர் சினேகன் அவருக்கு உதவினார். 

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *