இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டாம்… பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
ஐ.நா சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், நாளை நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த செயலுக்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், இலங்கைகக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில், திமுக தலைவர் முக.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஐ.நா.சபையில் கொண்டுவரப்படும் தீர்மானித்தின் போது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என அந்நாட்டு வெளியுறவு செயலாளர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா.சபையில் நாளை கொண்டுவரும் தீர்மானத்தில் அந்நாட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட பிரதமர் மோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.