இந்திய அணியை வென்று தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்க அணி!

இந்திய மகளிருக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் தொடரையும் தன்வசம் சாய்த்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.