அசுரனுக்கு தேசிய விருது
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு அசுரன் படம் வெளிவந்தது.
எழுத்தாளார் பூமணியின் “வெக்கை” புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்முறைகளை எடுத்துக்கூறிய இந்த படம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இந்நிலையில்,இன்று 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.அதில் அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.