ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த தீர்மானம் மீது நாளை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெற உள்ளது. இலங்கையில் நடந்த போரில் இலங்கை அரசுப் படை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு என இரு தரப்பினரும் மோசமான அடாவடிச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் இந்தியா, இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுவது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *