தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை வந்துவிட்டது – ஜெயக்குமார்!
தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை முழுவதையும் மத்திய அரசு தந்துவிட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் ஜிஎஸ்டி மூலம் பெற்ற வரி வருவாயை சரியாக பங்கீடு செய்யாமல் போக்கு காட்டி வருவதாகவும், தமிழக அரசு மத்திய அரசிடம் ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து கேட்டு பெறுவதில் தயக்கம் காட்டி வருவதாக எதிர்க்கட்சி உட்பட பலகட்சிகள் குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை அனைத்தையும் மத்திய அரசு கொடுத்துவிட்டதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை முழுவதையும் மத்திய அரசு தந்துவிட்டது. தற்போது வரை தமிழகத்துக்கான எந்தவிதமான ஜிஎஸ்டி நிலுவை தொகையும் மத்திய அரசிடம் இல்லை. தமிழக அரசு குறிப்பிட்ட சதவீதத்துக்கு உட்பட்டு தான் மத்திய அரசிடம் கடன் பெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.